Breaking
Mon. Dec 23rd, 2024

இந்தியாவின் தவறான வரைபடத்தை அல் ஜசீரா சேனல் கட்டியதாக குற்றம் சாட்டப் பட்டே அல் ஜசீரா டிவிக்கு இந்திய அரசு 5 நாள் தடையை விதித்துள்ளது. இதனால், அல் ஜசீரா டிவி இந்தியாவில் தற்போது தெரியவில்லை. அல் ஜசீரா டிவி சானல் ஒளிபரப்பாகும் எண்ணில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறையின் உத்தரவுப்படி இந்த சேனல், ஏப்ரல் 22ம் தேதி 00.01 மணியிலிருந்து 2015, ஏப்ரல் 27ம் தேதி 00.01 வரை ஒளிபரப்பப்பட மாட்டாது என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

முன்னதாக 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் பலமுறை இந்த சானல் காட்டிய இந்திய வரைபடமானது தவறானதாக இருந்தது. குறிப்பா காஷ்மீரை இந்தியாவின் பகுதி இல்லை என்பது போல காட்டிய வரைபடங்களை இந்த சானல் காட்டியிருந்தது. இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து ஆராயுமாறு இந்திய சர்வேயர் ஜெனரலுக்கு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு. இதையடுத்து ஆராய்ந்த மத்திய சர்வேயர் ஜெனரல், மத்திய அரசு அளித்த அறிக்கையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகள் அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்சய் சீன் ஆகிய பகுதிகள் அல் ஜசீரா காட்டிய வரைபடத்தில் இடம் பெறவில்லை. மேலும், இந்தியாவின் வரைபடத்தில் அந்தமான் தீவுகள், லட்சத் தீவுகள் ஆகியவையும் இடம் பெறவில்லை என்று கூறியிருந்தார்.

மேலும் முறையான வரைபடங்களை அல் ஜசீரா டிவி காட்டுவதில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது இந்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கு அல் ஜசீரா டிவி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசு கட்டாயத் தணிக்கையை நடத்தியுள்ளது. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

Related Post