Breaking
Tue. Mar 18th, 2025

மரணத் தண்டனை கைதிகளை தூக்கில் போடும் தொழிலான அளுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை திணைக்களத்திற்கு இதுவரை 24 விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப்பெற்றுளதாகவும் இம் மாதம் 13 ஆம் திகதி நடைபெறும் நேர்முகத் தெரிவின் போது தகுதியான  இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத் தொழிலுக்கு ஆகக் குறைந்த கல்வித் தகைமை 8 ஆம் தரம்வரை கல்வி கற்று இருக்க வேண்டும் என்பதோடு  அளுகோசு பதவிக்கு தெரிவாகும் நபரின் உடல்நிலை, மனநிலை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் நேர்முகப் பரீட்சைக்கு வருகை தரும் நபர்கள் தமது மருத்துவ சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

By

Related Post