இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டில் அழகுபடுத்தப்பட்ட தலைமன்னார் கடற்கரை பூங்கா நேற்று (03) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் இம்மானுவேல் அமரதுங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இதன்போது, தலைமன்னார் பிரதேசம் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கொண்டுள்ள ஒரு பிரதேசமாகும். அந்த வகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் அபிவிருத்திப் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனதவிசாளர் முஜாஹிர், அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
(ன)