Breaking
Sun. Nov 24th, 2024

 

-ஊடகப்பிரிவு-

நானாட்டான் பிரதேச மக்கள் அபிவிருத்தியுடன் இணையும் சக்திகளுடன் பயணிப்பதை விடுத்து எதையும் பெற்றுத்தர முடியாதவர்களுடன்  இருப்பதற்கான காரணம் அவர்களுக்கே புரியாமலுள்ளது எனவும் தற்போது அவர்கள்  அபிவிருத்தியின் ஒளியினை நோக்க ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் கைத்தொழில், வர்த்தக அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா கூறினார்.

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச சபைக்கு ஜக்கிய தேசிய முன்னணியில் இலகடிப்பிட்டி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்..

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் பல அபிவிருத்தி பணிகளை செய்து காட்டியுள்ளனர். இந்த அபிவிருத்திகள் தேர்தலை இலக்கு வைத்து செய்யும் ஒன்றல்ல. தேர்தல் காலத்தில் மட்டும் தமது கோறிக்கைகளை அரசியல் வாதிகள் நிவர்த்திக்க வேண்டும் என்று சிலர் விடாபிடியாக இருக்கின்றனர். இல்லாவிட்டால் வாக்களிக்க முடியாது என்ற மனநிலையினை உண்டுபண்ண முற்படுகின்றனர். அவர்களின் இந்த பிடிவாதத் தனம் என்பது இந்த பிரதேச நீண்டகால தேவைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், தேர்தல் முடிவுற்றதும் வாக்காளர்கள் கருவேப்பிலையாக மாறிவிடும் நிலைக்கு தள்ளிவிடும்.

இறைவன் தந்த பகுத்தறிவின் மூலம் விடயங்களை சாதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சின்னங்கள் தான் எனது கொள்கை என்று நினைப்பதும் தவறானதாகும். இதற்கு மாற்றமாக மனித நேயம், நல்ல சிந்தனை, சமூக பற்று என்பவைகளை கொண்டவர்களை உருவாக்க இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும்

வறுமையினை பயன்படுத்தி உணவுப் பொருட்களை கொண்டுவந்து தந்து வாக்குகளை பெறுபவர்கள், பழைய போர்க்கதைகளை சொல்லி நாங்கள் தான் இந்த தமிழ் மக்களின் விடிவினை தீர்மாணிக்கும் சக்தி என்று கூறிக்கொண்டு வருபவர்கள் ஏராளம். ஆனால், இவர்கள் எத்தனை தடவை உங்களது துன்பத்தில் பங்கெடுத்துள்ளார்கள்?

அரசாங்கத்தினை தீர்மாணிக்கும் பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர்.அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவியினை கொண்டு அரசாங்ககத்தை மண்ணியிடச் செய்து இந்த மக்களின் அபிவிருத்திகளை பெற்றுக் கொடுக்காமல், இன்னும் தமிழ் மக்கள் இயலாமைச் சமூகம் எதை சொன்னாலும் செய்வார்கள் என்ற கனவி்ல் இருந்துவருகின்றனர். ஆனால். அந்த நிலையினை இன்று நாங்கள் செல்கின்ற இடங்களில் மக்கள் தெரிவிக்கும் கருத்துககளினை வைத்து மதிப்பீடுகளை வழங்க முடிகின்றது.

நானாட்டான் பிரதேசத்தில் பல தேவைகள் உள்ளன.அவைகள் தொடர்பில் எமது வேட்பாளர்கள் பட்டியலி்ட்டு கொடுத்துள்ளனர். இது தேர்தல் காலம் உடனடியாக எல்லாவற்றையும் செய்ய முடியாது. சட்ட திட்டங்களை பார்த்து அதனை செய்ய வேண்டும். நீண்டகால குறுகியகால தேவைகள் என வகைப்படுத்தி அதனை எமது அமைச்சர் றிசாத் பதியுதீன் ஊடகச் செய்வோம். அவர் செய்யக் கூடியதை சொல்பவர். சொன்னதை செய்து காட்டியவர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எனவே, இந்த  தேர்தலில் நமது வேட்பாளர்களை வெற்றிப் பெறச் செய்து, அதன் மூலம் எதிர்வரும் வருடங்களில் இப்பிரசேத்தின் அபிவிருத்திக்கு  சொந்தக் காரர்களாக நீங்கள் மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் அவர் கூறினார்.

 

Related Post