ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மதியம் இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று நள்ளிரவு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி 3ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜாதிக ஹெல உறுமய கட்சி ஆளும் கட்சியை விட்டு விலகியமை தொடர்பிலும் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
இந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக கருதப்பட்டு வந்த சம்பிக்க ரணவக்க இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.(gtn)