Breaking
Tue. Dec 24th, 2024

முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாளை காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது கட்டாயம் என்றும், வர முடியாதவர்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதற்கான காரணத்தை விளக்கி முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்த முக்கியமான முடிவுகள் இந்த அவசர செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post