Breaking
Sun. Dec 22nd, 2024

இயற்கை அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் விடுக்கப்பட்ட அறிவிப்புத் தொடர்பில் கருத்துரைத்தபோதே ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் எம்.பியுமான விஜித ஹேரத், நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கவனத்தில் கொண்டு, அவசர அனர்த்த நிலைமையைப் பிரகடனப்படுத்துமாறு கோரி நின்றார்.

‘இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்டோர் மற்றும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளோர் தொடர்பில் நாமும் எங்களுடைய அவதானத்தை செலுத்துகின்றோம்.

பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவுகின்ற போது „சுற்றறிக்கை… இடையூறாக இருக்கின்றது. நலன்புரி நிலையங்களில் இருக்கின்ற மக்களுக்கு மட்டுமே உணவுகளை விநியோகிக்க முடியும். இதனால், சிற்சில பிரச்சினைகள் எழுகின்றன. ஆகையால், சுற்றறிக்கைக்கு அப்பால் சென்று சேவையாற்றும் வகையில் அவசர அனர்த்த நிலைமையை பிரகடனப்படுத்துங்கள்’ எனக் கோரி நின்றார்.

இதனிடையே எழுந்த அவை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, இந்தக் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும்’ என்றார்.

By

Related Post