நெதர்லாந்து ஹேக்யினை தலைமையகமாக கொண்டு இயங்கும் இரசாயன ஆயுதங்கள் தடுப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய இரசாயன ஆயுதங்கள் மற்றும் கைத்தொழில் இரசாயன பிரிவு,
ஆகியவற்றின் அனுசரனையில் அவசர கால இரசாயன கையாளுகை தொடர்பான பயிற்சி நெறி இன்று கொழும்பு தாஜ் சமுத்ராவில் ஆரம்பமானது.
5நாள் பயிற்சி செயலமர்வு அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.
இந்த நிறுவனத்தின் நெதர்லாந்து தடுப்பு பிரிவின் தலைவர் Shawn De caluwe அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.