Breaking
Mon. Dec 23rd, 2024

தம்பலகாமத்தில் நடைபெற்ற கொள்ளைப் பாணியானது மிகவும் விசித்திரமான வகையில் அமைந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் தம்பலகாமத்தில் நடைபெற்ற திருமண வைபவமொன்றில் கலந்து கொண்டு விட்டு கணவனும் மனைவியும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிப் பயணித்துள்ளனர்.

இதன் போது அவர்களின் பின்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அவர்களை மோதித் தள்ளியுள்ளது.

விபத்துக்குள்ளான இருவரும் சுதாகரிக்கும் முன்னரே விமுந்து கிடந்த பெண்ணின் கழுத்தில் இருந்த  தாலிக்கொடி உட்பட நகைகளை பறித்துக்கொண்டு பின்னாள் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

தமக்கு ஏற்பட்டது விபத்து என்றே முதலில் நம்பியிருந்த தம்பதியினர் சற்று நேரத்தின் பின்னரே அது திட்டமிடப்பட்ட கொள்ளை என்பதை  உணர்ந்துகொண்டனர்.

பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய குற்றவாளிகளைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

By

Related Post