ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி, கடற்படை தளபதி, ரக்னா லங்கா பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்ததுடன், அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, விஜயதாஸ ராஸபக்க்ஷ, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடலின்போது முறைக்கேடாக மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் வெளியானதாவும், அவை தொடர்பில் உடன் விசாரணை நடாத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார்.