அவன்ட்காட் ஆயுத கப்பல் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் குழுவொன்று இன்று கப்பலுக்குள் செல்லவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐவர் அடங்கிய குழுவொன்று இன்று காலை கப்பலுக்குள் செல்லவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று காலை விசாரணை நடவடிக்கைகளுக்காக கப்பலுக்குள் செல்லும் இந்த அதிகாரிகள் குழு நாளை மாலை வரை கப்பலில் தங்கியிருந்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய குறித்த காலப்பகுதியினுள் அந்த அதிகாரிகளினால் கப்பலில் உள்ள ஆயுதங்கள் தொடர்பில் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என லெசில் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.