இந்த வழக்குகள் தொடர்பில் உத்தரவுகளை பிறப்பித்த கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிற்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிசேவை ஆணைக்குழுவினால் இந்த உடனடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றின் 3ம் இலக்க நீதிமன்றில் நீதவானாக கடமையாற்றிய மேலதிக நீதவான் நிசாசந்த பீரிஸ் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாத்தறை மாவட்ட நீதிமன்ற நீதவானாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்டிருந்த பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதவான் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொலைத்தொடர்பு ஆணைக்குழுவில் இடம்பெற்ற 600 மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஸபெல்பிட்ட மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரை நீதிமன்றில் ஏன் நிறுத்தவில்லை என விளக்கம் அளிக்குமாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நீதவான் நிசாந்த உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.