Breaking
Mon. Dec 23rd, 2024
அவன்ட் கார்ட் நிறுவனம் பற்றிய உண்மைகளை சில ஊடகங்கள் வெளியிடுவதில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அவன்ட் கார்ட் பற்றி நான் வெளியிடும் உண்மைகளை சில ஊடகங்களும் இணைய ஊடகங்களும் வெளியிடுவதில்லை.

அவன்ட் கார்ட் நிறுவனம் சில ஊடகங்களுக்கும் இணைய ஊடகங்களுக்கும் பணம் வழங்கியுள்ளது.

நிறுவனம் பற்றி நான் வெளியிட்ட கருத்து சில பிரதான ஊடகங்களில் பிரதான செய்தியாக வெளியிடப்பட்டதுடன், சில ஊடகங்களில் மிகச் சிறிய செய்தியாகவேனும் வெளியாகவில்லை. இதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்க வேண்டும்.

அவன்ட் கார்ட் நிறுவனம் மாற்றுச் சிந்தனை ஊடகங்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஊடகங்களை பணம் கொடுத்து தம்பக்கம் சாய்த்துக்கொண்டுள்ளது.

நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்து சில ஊடகங்களில் மட்டுமே வெளியானது.

நான் அம்பலப்படுத்திய விடயங்களை மூடி மறைப்பதற்கு அவன்ட் கார்ட் நிறுவனம் பாரியளவில் பணத்தை செலவிட்டுள்ளது என அனுரகுமார திஸாநாயக்க சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

By

Related Post