Breaking
Mon. Dec 23rd, 2024
அவன்ட் கார்ட் மாரிடைம் என்னும் நிறுவனம் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி முதல் இந்த நிறுவனத்தின் அனைத்து பணிகளும் நிறுத்திக்கொள்ளப்பட உள்ளதாக அவன்ட் கார்ட் பாதுகாப்பு நிறுவனத்தின் வர்த்தக கப்பல் பாதுகாப்பு முகாமையாளர் ஓய்வு பெற்ற லெப்டினன் கேணல் நிலந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் மாரிடைம் நிறுவனம் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடமைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கு 4.1 பில்லியன் ரூபா வருமானத்தை அவன்ட் கார்ட் மாரிடைம் நிறுவனம் வழங்கியுள்ளது.

நிறுவனத்தை மூடுவதனால் ஓய்வு பெற்ற 5000த்திற்கும் மேற்பட்ட படைவீரர்கள் தொழில்களை இழக்க நேரிட்டுள்ளது.

அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் எழுந்த சர்ச்சைகள் காரணமாக சுமார் 150 சர்வதேச கப்பல்கள் எதிர்காலத்தில் இலங்கையிடமிருந்து பாதுகாப்பை கோராது என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

எவ்வறெனினும் அவன்ட் கார்ட் குழுமத்தின் ஏனைய நிறுவனங்கள் தொடர்ந்தும் இயங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்களும், எதிர்க்கட்சியினரும், நிறுவன நிர்வாகமும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றமை மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

By

Related Post