அவுஸ்திரேலியா நீதிமன்றத்திற்கு கல்ஹின்னயைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நீதிபதியாக நியமனம்
அவுஸ்திரேலிய விக்டோரியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் நீதிபதியாக இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் மார்ட்டீன் பகுலா இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதை அறிவித்துள்ளார்.
உர்பா மசூத் என்னும் இலங்கைப் பெண்ணே இவ்வாறு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கண்டி மாவட்டம் கல்ஹின்ன, பாடசாலை வீதியைச் சேர்ந்த மசூத் – சித்தி சாஹிரா தம்பதியின் புதல்வி ஆவார்.
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்த இவர் பின்னர் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்து சென்று 2003ம் ஆண்டு முதல் சட்டத்தரணியாக பயிற்சி பெற்று வந்த நிலையில் தற்போது மஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் குற்றவியல் சட்டம் தொடர்பிலும், குழந்தை பாதுகாப்பு மற்றும் குடும்பச் சட்டம், விக்டோரியன் பூர்வீகக் குடி சட்டம் என்பவற்றில் குறிப்பிடத்தக்களவு அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
இவர் இரு குழந்தைகளின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.