அக்கரைப்பற்று மண்ணின் மைந்தன் அஷ் ஷெய்க் எஸ். எல். எம். ஹனீபா மதனி மூத்த உலமாக்களில் ஒருவராக, ஆசிரியராக, மதீனா சர்வதேச பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாக, வர்த்தகராக, பதிவு செய்யப்பட்ட அரச ஒப்பந்தக்காரராக, சமூக சேவையாளராக பல்வேறு பரிமாணங்களை அடைந்து அதனால் அல்லாஹ்வின் உதவியினால் அம்பாறை மாவட்ட பள்ளிவாயல்களின் சம்மேளனத் தலைவராக 2005ல் தெரிவு செய்யப்பட்டு சிவில் சமூக செயற்பாட்டாளராக அடையாளப்படுத்தப்பட்டார்.
இத்தகைய இவரது பின்புலம், அறிவு, அனுபவம் என்பன இவர் மீது மக்களுக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியமையால் 2006 − 2008 காலப்பகுதியில் “மூதூர் பிரகடனம்” என்ற ஒன்றை முஸ்லிம் சமூகத்துக்காக அர்ப்பணிப்போடும், மிக தைரியத்தோடும் தலமை தாங்கி மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டார்.
இப்பிரகடன நிகழ்வு தேசியத்திலும், சர்வதேசத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் அன்றைய பேசுபொருளாகவும் மாறியது.
லண்டன் BBC வானொலி இலங்கையில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் துயரங்கள் பற்றி அஷ் ஷெய்க் எஸ். எல். எம். ஹனீபா மதனியிடம் நேர்காணல் ஒன்றை உடனடியாக ஏற்படுத்தியது. இவ் அரிய வாய்ப்பை அவர் மிக சாணக்கியமாகவும் துணிவாகவும் சமூகத்துக்காகப் பயன்படுத்தினார். இக்கால கட்டத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தராக செயற்பட்ட MWRAF (றெப்f) அமைப்பின் தலைவி தேசபந்து ஜெஸீமா இஸ்மாயிலின் அறிமுகமும் இவருக்கு கிட்டியது. இதனால் அம்பாறை மாவட்ட பள்ளிவாயல் சம்மேளனம், ஜம்இய்யத்துல் உலமா போன்ற சமய நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு மேற்படி MWRAF (றெப்f) சம்மேளனத்துடன் இணைந்து பின்வரும் நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தது.