Breaking
Fri. Jan 10th, 2025

அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் உடுகம புத்தரகித்த தேரர் சிங்கப்பூரில் தங்கியிருந்த வேளை காலமாகியுள்ளார். அஸ்கிரிய பீடத்தின்தியவதன நிலமே இத்தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மறைந்த அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் உடுகம புத்தரகித்த தேரர் சுகயீனம்காரணமாக சிங்கப்பூர் மௌன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே காலமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன் இவர்கடந்த ஒரு மாதகாலமாக உடல்நிலை சீராகயில்லாததால் குறித்த இவ்வைத்தியசாலையிலேயே தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்ததாக வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் சமய சுதந்திரத்தை ஆததரிப்பவர் என்பதோடு, அனைத்து மதத்தினையும் மதிக்கக் கூடியவருமாவார்.மறைந்த அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் உடுகம புத்தரகித்த தேரரின் மரணச்செய்தியைக் கேட்டு தான் ஆழ்ந்த கவலையடைந்ததாக தனதுஅனுதாபத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.

மறைந்த அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் உடுகம புத்தரகித்த தேரர் இறக்கும் போது அவருக்கு வயது 86 என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். இவர் இனமத வேறுபாடின்றி சகல இனத்தவர்களையும் சமமாக மதித்துவந்தார்.

Related Post