Breaking
Mon. Dec 23rd, 2024

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களால் எழுதப்பட்ட அல்-ஜிஹாத் அல்-காஇதா என்ற புத்தகத்தை முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் கிழித்து எறிந்ததையிட்டு ஆச்சரியப்படுகின்றேன்.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களால் எழுதப்பட்ட அல்-ஜிஹாத் அல்-காஇதா என்ற புத்தகம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டதாகும். அப்பொழுது முஸ்லிம் அறிஞர்கள், முஸ்லிம் புத்தி ஜீவிகள் கண்டனம் தெரிவித்து மறுப்பு எழுதினார்கள்.

அக்காலத்தில் பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும் பின்னர் அமைச்சராகவும் இருந்த அஸ்வர் கிறுக்காஜியார் எந்தவொரு நடவடிக்கையை எடுக்கவோ, வாய்பேசவோ இல்லை. தற்பொழுது அரசியல் இலாபங்களுக்hக கத்தித் திரிவது கவலையளிக்கின்றது.

முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராக இருக்கும் போதாவது குறித்த புத்தகத்தை கிழிக்கவோ எந்தவொரு நடவடிக்கையோ எடுக்கவில்லை. மாறாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கபட்ட யாப்பு நகலை நெருப்பு கொழுத்திய சிறப்பு அஸவர் கிறுக்காஜியாரையே சாரும்.

கடந்த வாரம் அல்குர்ஆன் வசனம் ஒன்றை பிழையாக ஓதியது மாத்திரம் இன்றி பிழையான விளக்கங்களை கொடுத்து பேசியது பத்திரிகைகளிலும் இணையதளங்கள் ஊடாகவும் வெளிவந்தது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும்.

இறுதியாக! கிறுக்காஜியாரே!!! அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கவோ, அல்குர்ஆனையோ, ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் நிறுவனங்களையோ பயன்படுத்த வேண்டாம் என்பதை கலிமா சொன்ன முஸ்லிம் சமூகங்களின் வேண்டுகோளாகும்.

அத்தோடு அஸ்வர் ஹாஜியாரே!!!! இதுவரை காலமும் அரசியலில் இருந்து செய்த வேலை ஒன்றும் இல்லை. இனிமேல் மஹிந்த வெத்தாது என்பது உறுதி…. அப்படித்தான் வெத்தினாலும் தாங்களால் முஸ்லிம்களை காட்டிக் கொடுப்பதை தவிர வேறுஒன்றையும் செய்யவும் முடியாது.

எனவே வயதுபோய் மவுத்துக்கு நெருங்கியவன்னம் தல்லாடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அவன் இவனுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு அநியாயமாக பாவத்தை சுமக்காமல் தான் செய்த பாவங்களை நினைத்து அல்லாஹ்விடம் தௌபா செய்து பள்ளியோட காலத்தை கழித்து மறுமை நாளில் வெற்றியை பெற வழியை பாருங்கள்.
இதனை அஸ்வர் ஹாஜியார் அவர்களுக்கு எத்திவைப்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!!!
சுப்ராஸ் அலிகான் – புத்தளம்

Related Post