அ.இ.ம. காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் ஏற்பாட்டின் மூலம் தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் 2017ம் ஆண்டின் நிதி ஒதுக்கீட்டில்
விசேட முயற்சியான்மை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு சுயதொழிலில் ஈடுபடும் வருமானம் குறைந்த சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(27) காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அ.இ.ம. காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ எம். ஜலீல், பிரதேச சபை உறுப்பினர் கௌரவ எ.ஆர்.எம் பஸ்மீர், மாவடிப்பள்ளி மத்திய குழுத் தலைவர் எம். றஸாக்(ஜெமீல்), செயலாளர் கே. இம்தியாஸ், பிரதேச செயலக கணக்காளர் செல்வி.என்.ஜயசர்மிகா அவர்களும், அபிவிருத்தி இணைப்பாளர் ஜனாப்.ஐ.எல்.எம்.ராபிஊ அவர்களும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்கள்.