அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நற்பிட்டிமுனை ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் கல்முனை தொகுதி கட்சி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சதோஷ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சி.எம்.முபீத் தலைமையில் நற்பிட்டிமுனை தையல் பயிற்சி நிலையத்தில் Gjd;fpoik (05) இரவு 7.00 மணிக்கு நடை பெற்றது.
முன்னாள் நற்பிட்டிமுனை பள்ளிவாசல் தலைவர் செயலாளர் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சி.எம்.ஹலீம் உட்பட முக்கிய பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்
முபீத் அங்கு உரையாற்றிய போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸை அம்பாறைக்கு கொண்டுவந்து தனித்து தேர்தலில் போட்டியிடும் நிலையை உருவாக்கியவர்கள் நற்பிட்டிமுனை மக்களாகிய நீங்கள். அதன் மூலம் என்னை கல்முனை மாநகர சபைக்கு தெரிவு செய்து உங்கள் சேவகனாக அனுப்பினீர்கள் என்னால் முடியுமான அத்தனை விடயங்களையும் உங்களுக்காக செய்து தந்துள்ளேன் . எமது கட்சியின் தலைவர் நற்பிட்டிமுனை மக்களையும் என்னையும் என்றும் மதிக்கின்றார் . அவரின் மூலம் எமது கிராமம் பல நன்மைகளைப் பெற்றுள்ளது.
மேலும் நற்பிட்டிமுனை கிராமத்தை கடந்த அரசியல் கலாச்சாரம் புறக்கணித்தது மாநகர சபையினால் பாலர் பாடசாலைக்கு ஒதுக்கப் பட்ட கட்டிடத்தை உடைத்தெறிந்தார்கள் , 15கோடி ரூபாவில் தொழில் பேட்டை ஒன்றை எமது தலைவர் நட்பிட்டிமுனைக்கு நிறுவ வந்த போது அதற்கு தடை ஏற்படுத்தி அது காத்தான் குடியில் நிறுவப் பட்டு ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதிகள் தொழில் புரிந்து வருமானம் பெற்று வருகின்றனர். இது எமது கிராமத்துக்கு கிடைக்க வேண்டிய வரப் பிரசாதம் . இந்த அநியாயங்களை செய்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் எம்மிடம் வாக்கு கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடை பெறப் போகும் தேர்தலில் எமது கட்சியும் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் களம் இறங்கியுள்ள நிலையில் நாம் எவ்வாறு நடந்து கொள்வதென்று தனது ஆதரவாளர்களின் ஆலோசனைகளைக் கேட்டார்.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 200 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் எமது கட்சியின் மயில் சின்னத்துக்கு வாக்களிப்பதென்றும் வேட்பாளர்களை சந்திப்பதென்றும் ஏகமனதாக தீர்மானித்தனர் .இந்த சந்தர்ப்பத்தில் வேட்பாளர்களான சித்தீக் நதீர் ,சிராஸ் மீரா சாஹிப் ஆகியோரும் பிரசன்னமாகி தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர் .