Breaking
Mon. Dec 23rd, 2024

-எம்.எஸ்.எம். ஹனீபா

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடுவது தொடர்பாக ஆராயும் அரசியல் அதியுயர் பீடம், அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் நாளை வியாழக்கிழமை (09) கூடி, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாகவும் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென்றும் அம்பாறை மாவட்டத்திலும் மன்னார் மாவட்டத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சில இடங்களில் தனித்தும் சில இடங்களில் ஐ.தே.கட்சியுடன் இணைந்தும் யானைச் சின்னத்திலும் களமிறங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் நாயகம் மேலும் கூறினார்.

இதன்படி திருகோணமலை, மட்டக்களப்பு, களுத்துறை, அநுராதபுரம், குருநாகல், புத்தளம், வன்னி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஜக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

Related Post