Breaking
Mon. Dec 23rd, 2024
இந்தியாவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் வீடமைப்பு அமைச்சர்களின் மாநாட்டில் இலங்கை சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர்
ஆசிய பசுபிக் வலய நாடுகளின் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்களின் நாட்டில் அமுல்படுத்தப்படவிருக்கும், வீடமைப்பு மற்றும் குடியிருப்பு செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும்.
மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.
வீடமைப்பு, குடியிருப்பு அபிவிருத்தி, நகரமயமாதல், போன்ற துறைகளில் பிராந்திய ரீதியில் எழுந்துள்ள, சவால்கள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்படடுள்ளது.
அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடடுக்;கான விசேட குழுவொன்றும் நியமி;கப்பட்டுள்ளது. இந்தியா, ஈரான், மாலைதீவுகள், கொரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்குகொள்ளுகின்றனர்.

By

Related Post