Breaking
Tue. Dec 24th, 2024

– சுலைமான் றாபி –

கல்வியமைச்சினால் வருடா வருடம் நடாத்தப்படும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைக் கௌரவிக்கும் விழாவான பிரதீபா பிரபா விருதில் நிந்தவூர் கமு/கமு/அல் மஸ்லம் வித்தியாலயத்தினைச்சேர்ந்த மீராலெப்பை யாகூப் ஆசிரியர் கல்முனை கல்வி மாவட்ட பாடசாலை, கோட்டம்,  மற்றும் வலய மட்டங்களில் தெரிவு செய்யப்பட்டு  ஆசிரியர் தினமான நேற்று (06) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதீபா பிரபா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

25 வருட ஆசிரியர் சேவை மூப்பினைக் கொண்ட இவ்வாசிரியர்  பாடசாலைக்காலங்களில் விடுமுறைகளை மேற்கொள்ளாது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்கினை ஆற்றியதோடு, இப்பாடசாலையின் பல்வேறு ஆற்றல்களை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

By

Related Post