ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முறையான திட்டமொன்று வகுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
குருணாகலை வெல்லவ மத்திய மகா வித்தியாலத்தியத்தின் புதிய இரு மாடி கட்டிடம் மற்றும் கணினிக்கூடம் திறப்புவிழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முறையான திட்டமொன்று அவசியம் என்பது தற்போது அடையாளங்காணப்பட்டுள்ளது. பிரதமரின் ஆலோசனைக்கமைய வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது தவிர கல்வி மேம்பாட்டுக்காக எதிர்காலத்தில் பல்வேறு தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் ஆயிரம் விமர்சனங்களை விடவும் இலட்ச வாழ்த்துக்களே முக்கியம் என்று அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து பிரதியமைச்சர் ஆசோக்க அபேசிங்க உட்பட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது