Breaking
Fri. Jan 10th, 2025

இக்பால் அலி

வரலாற்றின் முன் எப்போதும் இல்லாதவாறு இந் நாட்டின் ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பு செய்ததொரு வரலாற்று புகழ் மிக்க தேர்தலொன்றையே நாம் சந்தித்தோம்.

இன்று நாட்டில் நிம்மதி சந்தோசம் நிலவுகின்றது. அரசியல் மற்றும் கொள்கைரீதியில் பல்வேறு கருத்து வேற்றுமைகளை கொண்ட சக்திகள் ஒன்று சேர்ந்து இவ்வரசாங்கத்தை அமைத்துள்ளோம். மேலும் குறுகிய எதிர்காலத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்களை இலங்கை சந்திக்கவுள்ளது. குறிப்பாக தேர்தல் முறை மாற்றங்கள் பற்றி அரசின் மேல்மட்ட அவதானம் பதிவாகியுள்ளது.

இதில் உங்களை போன்ற சிவில் சமூக அமைப்புகள் அவதானம் செலுத்தி முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பேணப்படுவதற்கான ஆலோசனைகள் விதந்துரைப்புகளை இப்போதிருந்தே கலந்துரையாடப்பட்டு அதை எழுத்து மூலம் ஆவணப்படுத்தி எம்மிடம் சமர்பிக்க ஏற்பாடுகளை செய்வீர்களாயின் இவற்றை உள்வாங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் ‘ என்று கைத்தொழில் பொருளாதார அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் தெரிவித்தார்கள்.

மலையக முஸ்லிம் கவுன்சில் மூலம் கடந்த வரலாற்று புகழ் மிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக களமிறங்கி பாடுபட்ட முஸ்லிம் சிறும்பான்மை கட்சி தலைமைகளை ஒன்று கூட்டி ஏற்பாடு செய்த பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது, மேற்படி கருத்தை தெரிவித்தார்.

Related Post