வழங்க நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு!!!
திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த சமுர்த்தி, சமூக வலுவூட்டல் அமைச்சர் ஹரிசன், சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டார் .
இந்நிகழ்வில் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் திருகோணமலை மாவட்டத்தை பொருத்தமட்டில் 38000 அதிகமான சமுர்த்தி பெறுவோர் இருக்கின்றனர் , மேலும் 19500 சமுர்த்தி கொடுப்பனவுகள் வேண்டியிருக்கின்றது இதில் எந்தவிதமான வேறுபாடின்றி வறுமையை எதிர்கொள்பவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும்.
இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை நிதி நிறுவனங்களிடமிருந்து தவணை முறையில் பணம் செலுத்தி பெற்று கடனாளிகளாக தமது தொழிலை மிகவும் கஷ்டமான நிலையில் செய்துவருவதோடு, அவர்களுடைய வாழ்கையையும் பல துன்பங்களுக்கு மத்தியில் நடத்திவருகின்றனர் இவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் நல்ல நிலைக்கு வரும் வரையில் சமுர்த்தி கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடத்தில் கேட்டுகொண்டார். அத்தோடு மாட்டுவண்டில்களில், சைக்கிள்களில் விறகு தொழில் செய்வோருக்கும், கடற்தொழிலை சுதந்திமாக செய்ய முடிந்துள்ளதினால் அவர்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்க அமைச்சர் முன்வரவேண்டும் எனவும் கேட்டுகொண்டார் .
இதன் பின்னர் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹரிசன்,
நல்லாட்சியில் சமுர்த்தி கொடுப்பனவு பெறுபவர்களின் எண்ணிகையை நாடு முழுவதும் அதிகரிக்கவுள்ளதாகவும் அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் வழங்குகையில் இங்கு பாராளுமன்ற உறுப்பினர் எனது நண்பர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்கள் குறிப்பிட்டதுபோல ஆட்டோ ஓட்டுனர்கள் , காட்டு தொழிலார்கள் , கடற்தொழி லார்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேட்கொள்ளவுல்லாத தெரிவித்ததார் . அத்தோடு இம்மாவட்டத்தில் இருகின்ற சமுர்த்தி வங்கி , மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கு அவர்களின் முன்னேற்றதிட்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென்றும் கூறினார்.
(ன)