Breaking
Mon. Dec 23rd, 2024

வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்­கெ­டுப்பில் ஆத­ர­வாக வாக்­க­ளித்த அனை­வ­ருக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நன்­றி­களைத் தெரி­வித்­துள்ளார்.

2016ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முத­லா­வது வாக்­கெ­டுப்பு நேற்று பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றது.

இதன்­போது வர­வு­செ­லவு திட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த அனைத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி நன்றி தெரி­வித்­துள்­ள­தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 2016 ஆம் ஆண்டிற்கான  வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று 107 மேலதிக வாக்குகளால் நிறைவுபெற்றுள்ளதுடன் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post