Breaking
Sat. Dec 21st, 2024

அனர்த்தத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும் மக்களை பார்க்கச் சென்றவர்கள் தமது கட்சி ஆதரவாளர்கள் யாரென்று தேடிச்சென்று உதவிகளை வழங்கியமையும் கட்சி சார்ந்து உதவிகளை வழங்கியதையும் பார்க்க முடிந்தது. நல்லாட்சி அரசாங்கம் தம்மை ஆதரித்த நபர்களுக்கு மட்டுமே உதவிகளை செய்து வருகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அரசாங்கம் குறுகிய நோக்கத்தில் செயற்பட்டாலும் நாம் இன மத பேதமின்றி உதவிசெய்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தில் மஹிந்த ஆதரவு அணியினர் ஈடுபட்டுவரும் நிலையில் நேற்று (30) களனி பிரதேசத்தில் நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

By

Related Post