Breaking
Mon. Dec 23rd, 2024

ஆனையிறவு உப்பளத்தை உயிர்ப்புள்ளதாக்கி உப்பு உற்பத்தியில் இலங்கையில் தன்னிறைவு பெறுவதே எமது இலக்காகுன்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஆனையிறவு உப்பளத்தை நேற்று (24) மாலை பார்வையிட்ட பின்னர் அங்கு குழுமியிருந்த உப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தபோது கூறியதாவது,

அரசியல் ஆதாயத்துக்காக உங்களைப் பலர் பிழையான வழியில் நடத்தலாம். அதற்கெல்லாம் நீங்கள் மசிந்து உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ளக் கூடாது. இலங்கையைப் பொறுத்த வரையில் 20% ஆன உப்பு இறக்குமதி செய்யப்படுகின்றது. உப்புத்தொழிலை மேம்படுத்தினால் இறக்குமதி செய்யும் உப்பை மேலும் குறைக்கலாம்.
பாராளுமன்றத்தில் சில அரசியல்வாதிகள்  உப்புச்சப்பில்லாத கதைகளைக் கதைத்து மக்களைத் தவறான வழியில் திசை திருப்புகின்றனர். இவர்கள் என்னதான் கூறினாலும் நாம் எடுத்த முயற்சியைக் கைவிடப்போவதில்லை.
ஆனையிறவில் அரசியல் நடத்தும் தேவை எனக்கில்லை. இந்தப் பிரதேசத்தை பொருளாதார வளமுள்ள பிரதேசமாக மாற்றியமைப்பதற்காக அழிந்து போன தொழிற்சாலைகளையும் ஏனைய நிறுவனங்களையும் கட்டியெழுப்புவதே ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஒரே நோக்காகும்.
ஆனையிறவு உப்பளத்தையும் அதனோடு சார்ந்த குஞ்சாக்கேணி உப்புத் தொழிலகத்தையும் மீண்டும் நன்முறையில் இயங்கச்செய்தால் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையையும் துரிதமாக ஆரம்பிக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
ஆனையிரவு உப்பளத்தில் உப்பு உற்பத்தியாளர்களுக்கான நிலுவைகளை இன்னும் ஆறு மாதங்களில் வழங்கவுள்ளோம். அத்துடன் இங்கு வேலை செய்யும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குவேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
image (1)

By

Related Post