இணையதள கட்டுரை களஞ்சியமான விக்கிபீடியாவுக்கு ரஷ்யாவில் திடீரென சில மணிநேரம் தடை விதிக்கப்பட்டது. இது இண்டர்நெட் பயன்பாட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த தடை நீக்கப்பட்டது.
அண்மையில், ரஷ்யாவில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்படி, போதை பொருட்களை பயன்படுத்துதல், தற்கொலை உள்ளிட்டவை பற்றிய தகவல்களை விக்கிபீடியாவில் பதிவு செய்தல் தடை செய்யப்பட்ட ஒன்றாக அறிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் அரசு தகவல்தொடர்பு ஏஜென்ஸி இன்று காலை இதுபோன்ற தடை செய்யப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கிய ரஷ்ய வீக்கிபீடியா பக்கங்களை முடக்கியது.
மேலும், அலெக்ஸி நாவல்னி உள்ளிட்ட பிரபல எதிர்கட்சி தலைவர்களின் வலைத்தளங்களையும் முடக்கியது அந்நாட்டு இணையதள பயன்பாட்டாளர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.