Breaking
Mon. Dec 23rd, 2024
பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான இணையத்தளங்களுக்கு தடை விதித்து, அந்த இணையத்தளங்களுக்கு பிரவேசிக்கும் மார்க்கங்களை தடை செய்யுமாறு கோரி கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று நடைபெறவுள்ளது.

கையெழுத்து வேட்டை இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.

ஆலோசனை மற்றும் நல்லிணக்க சபை ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த கையொப்பம் திரட்டும் நடவடிக்கை காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை இடம்பெறவுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகங்களில் அதிகரிப்பு மற்றும் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு, பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான இணையத்தளங்கள் காரணமாக அமைந்துள்ளதாக ஆலோசனை மற்றும் நல்லிணக்க சபையின் செயலாளர் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹீல் டொல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹொலிவூட், பொலிவூட் மற்றும் ஆபாசப் படங்களில் நடிக்கும் பிரபல நடிகையொருவர், இலங்கையிலுள்ள அனுமதிபெற்ற கெசினோ வலையமைப்போன்றின் அழைப்பின் பேரில் எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

குறித்த செய்திகளை இலங்கையில் இயங்கும் சில செய்தி இணையத்தளங்கள் இலவசமாக விளம்பரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தகது.

By

Related Post