Breaking
Thu. Nov 14th, 2024

சொத்து எப்படி சம்பாதிக்கப்பட்டது என்பதை வெளியிட முடியாது போன மேலும் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்கும் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ள பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது.

ஒருவரிடம் இருக்கும் சொத்து எப்படி வாங்கப்பட்டது என்பதை அவர் உறுதிப்படுத்த தவறினால், பணச் சலவை சட்டத்தின் கீழ் அந்த சொத்து அரசுக்கு சொந்தமாகும்.

அத்துடன் அவ்வாறான சொத்துக்களை கொள்வனவு செய்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளன.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடத்திய வரும் 300க்கும் மேற்பட்ட விசாரணைகளில் 100 விசாரணைகள் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்கள் தொடர்பானதுடன், அவை எப்படி கொள்வனவு செய்யப்பட்டன என்பதை குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சொத்துக்களின் உரிமையாளர்கள் வெளியிட தவறியுள்ளனர்.

அரசியல்வாதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனங்களின் பிரதானிகள், கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள், சபைகளின் தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் பலர் முறைகேடாக சம்பாதித்த சொத்துக்களை அவர்களின் உறவினர்களுக்கு எழுதிக்கொடுத்துள்ளனர்.

இவர்கள் தாம் இந்த சொத்துக்களை சம்பாதித்த விதத்தை வெளியிட தவறியுள்ளனர்.

சொத்துகளை சம்பாதித்த விதத்தை வெளியிட தவறியுள்ள சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் முறைப்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட நபர்களில் பலர் வெளிநாட்டு வங்கிகளில் இரகசியமான முறையில் வைப்புச் செய்துள்ள பல கணக்குகள் குறித்த தகவல்கள், வெளிவிவகார அமைச்சின் ஊடாக நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்துள்ளது.

இந்த நபர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் பணத்தை வைப்புச் செய்துள்ளனர். இவர்களை விசாரணைக்கு அழைத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது. (tw)

By

Related Post