அதிவேகப் பாதை நிர்மாணப் பணிகளுக்கென எடுத்து வரப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட இரும்புக் கம்பிகளின் பெறுமதி ஒரு லட்சத்தி முப்பத்தி ஐயாயிரம் ரூபா என்று தெரிய வருகின்றது.
கொள்ளையைத் தடுக்க முயன்ற பாதுகாவலர்களை ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி இரும்புக் கம்பிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
கடவத்தை சந்திக்கு அருகில் உள்ள மங்கட எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தக் கொள்ளையில் தொடர்புடைய இரண்டு பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய கொள்ளையர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.