Breaking
Mon. Dec 23rd, 2024
1983  ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம் பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய சொத்தழிப்பு கலவரமாக அளுத்கம சம்பவம் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யுங்கள் என்று ஆதாரங்களை ஜனாதிபதியிடம் கொடுத்த போது அதற்கு அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொழும்பில் தெரிவித்தார்.
ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து கொழும்பு ஆட்டுப் பட்டித்தெருவில் நேற்று இரவு இடம் பெற்ற மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் உரையாற்றுகையில் கூறியதாவது-
கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னரான சமாதானத்தை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த சமாதானத்தின் மூலம் மக்கள் நன்மையடையவார்கள் என்று எதிர்பார்த்தோம்.ஆனால் அது இடம் பெறவில்லை. மாறாக இந்த அரசாங்கத்தின் பதவி நிலையில் உள்ள சிலர் இனவாத குழுக்களை அமைத்து சிங்கள-முஸ்லிம் மக்களை மோதவிட்டு அதன் மூலம் இன்க்கலவரத்துக்கு துாபமிட்டனர்.அதனை இண்மையக் காலமாக நாம் கண்டுவருகின்றோம்.
தொடர்ந்தும் இவ்வாறான ஆட்சியாளர்களுக்கு நாம் வாக்களித்து ஆட்சி அதிகாரத்தை கொடுப்போமெனில் இதனை விட மோசமான அழிவினை இவர்கள் ஏற்படுத்துவார்கள்.சிறுபான்மை முஸ்லிம்,தமிழ் மக்களுக்கு எதிராக மன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு நாம் கண்டித்தோம்.அதனை தடுப்பதற்கு நடவடிக்கையெடுக்குமாறு பல முறை கோறினோம்.நாம் கோறுகின்ற போது எம்மீது சீறிப்பாயும் ஒருவராக ஜனாதிபதி இருந்தார்.அன்று அமைச்சரவையில் இருந்த ராஜித சேனாரத்தின அவர்களிடம் சொன்னேன்.இந்த அரசாங்கத்தில் இருந்து விலகிவிடுவோம் என்று அவர் பொறுமை காக்க சொன்னார் சந்தர்ப்பம் நேரம் உரு முறை வரும் என்றார்.அந்த சந்ரப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இன்று பொதுவேட்பாளரின் வெற்றி என்பது நல்லாட்சிக்கான சிறந்ததொரு மூலதனமாகும்.அரசாங்கத்தில் இருந்த ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சி,தமிழ் தேசிய கூட்டமைப்பு,ஜாதிக ஹெல உருமய,மற்றும் மனோ கணேஷனின் கட்சி,ஜக்கிய தேசிய  கட்சி,ஆசாத் சாலியின் கட்சி உள்ளிட்ட இன்னுமு் எத்தனையோ கட்சிகளும்,அமைப்புக்களும் ஒரே அணியில் இருந்து பணியாற்றிவருகின்றது.இது நல்லதொரு முன்மாதிரியாகும்.
இதனை தாங்கிக்கொள்ள முடியாத ஜனாதிபதி எமக்கெதிராக இல்லாதவற்றை கூறுகின்றார். ரவூப் ஹக்கீம் அவர்களை பயங்கரவாத அமைப்பை போன்று கூறிவருகின்றார்.நாங்கள் நாட்டை துண்டாடச் சொல்லவில்லை,இது எமது நாடு,தமிழர்கள்,முஸ்லிம்கள்,சிங்களவர்கள் ஒற்றுமையாக வாழும் நாடு,நாம் கேட்பதெல்லாம் இந்த அனைத்து சமூகங்களையும் நிம்மதியாக வாழவிடுங்கள் என்று  அதற்கு விருப்பமில்லாத ஜனாதிபதி தாம் 3 முறை  அல்ல,ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்று ஆசை கொண்டுவிட்டார் என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன்,தலை நகரில் எமது மக்கள் தலை நிமிர்ந்து வாழ மைத்திரியின் ஆட்சியினை உருவாக்க எஞ்சியிருக்கும் இந்த சில நாட்களை முழுமையாக பயன்படுத்தி மக்களை அறிவூட்டி வாக்குகளை மைத்திரிபால சிறிசேன அவர்களின் அன்னச் சின்னத்துக்கு பெறுகின்ற துாய்மையான போராட்டத்தில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான்,ஆசாத் சாலி,கொழும்பு மேயர் முசம்மில் ,மனோ கணேஷன்,முன்னால் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கொழும்பு மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதம அமைப்பாளர் றியாஸ் சாலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
20150103_210906 20150103_211009

Related Post