Breaking
Sat. Jan 11th, 2025

கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி ஆகிய இரு பிரதேச செயலாளா் பிரிவில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரச அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயும் விஷேட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (30) பிரதேச செயலகங்களின் கேட்போர் கூடத்தில் பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ்.அமீா் அலி தலைமையில் நடைபெற்றது.

இதன் போது கோறளைப்பற்று பிரதேச செயலாளா் எம்.எம்.நௌபா், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளா் திருமதி நிஹாரா மௌஜூத்,பிரதேச சபை தவிசாளா் கே.பீ.எஸ்.ஹமீட்,பிரதி தவிசாளா் ஏ.எம்.நௌபா், செயலகத்தின் உதவித்திட்டமிடல் அதிகாரிகளான எஸ்.ஏ.றியாஸ், எச்.எம்.எம்.றுவைத் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா்.

இதன் போது அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் பற்றியும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டம் தொடர்பிலும் மேற்கொள்ளப்படவிருக்கும் ”கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம்” குறித்தும் மக்கள் பிரதிநிதிகளினாலும், அதிகாரிகளினாலும் விரிவாக கலந்தாராயப்பட்டன.

Related Post