Breaking
Wed. Dec 25th, 2024

நீதிமன்ற உத்தரவை மதிக்காது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த நபர்கள் மீது சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்ட நிலையில், அதனை மீறி பிக்குகள், அரசியல்வாதிகள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோத்தாபய ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post