இந்தியாவின் கடும்போக்கு இந்து ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்து தென்னாசியாவில் பௌத்த இந்து சமாதான வலயத்தை அமைக்கும் வகையில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக பொதுபலசேனா அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் மூலம் பிராந்தியத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கமுடியும் என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இந்தியாவில் உள்ள பௌத்த அமைப்புக்களுடனும் தமது அமைப்பு பேச்சு நடத்துவதாக தேரர் தெரிவித்துள்ளார்.
ராஸ்ரிய சுவாயமசேவான் சங்க் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்புடன் கூட்டணி அமைக்க தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் தேரர் கூறியுள்ளார்.
ஏற்கனவே பொதுபலசேனா மியன்மாரின் 969 அமைப்புடனும் அண்மையில் உடன்படிக்கைகளை செய்துகொண்டுள்ளது. (j)