Breaking
Sun. Dec 22nd, 2024
-அனா-
மேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவருமான ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வழியுறுத்தி நேற்று (திங்கள் கிழமை) மாலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடையில் அமைதிப் பேரணி இடம் பெற்றது.
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆஸாத் சாலி தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கேட்ட போது தேர்தலில் போட்டியிட வேண்டாம் உங்களுக்கு தேசிப்பட்டடியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தினால் வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு ஏற்ப ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக அவர்களது தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார் இருந்தும் அவருக்கு கொடுத்த வாக்குறுதி போல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வில்லை அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பேரணியில் கழந்து கொண்டோர் கருத்து தெரவித்தனர்.
கல்குடா இளைஞர் அமைப்பு தலைவர் எச்.எம்.நிஜாம்தீன் தலைமையில் இடம் பெற்ற பேரணி மீறாவோடை றிழ்வான் பள்ளிவாயல் சந்தியில் இருந்து ஆரம்பமான பேரணி மீறாவோடை ஓட்டமாவடி எல்லை வீதிவரை சென்றது.

Related Post