Breaking
Mon. Dec 23rd, 2024
(JM.Hafeez)
சாதாரண குடிமகனான என்னை அரசியல் மூலம் உயர்த்திவைக்கக் காரணம் நான் வாழும் சூழலாகும், வேட்பாளர்கள் அதிகமான பணத்தை தேர்தல்களுக்காகச் செலவிடும் துர்ப்பாக்கியம் எமது மாகாண சபை முறையில் உள்ளது என்று மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஜெய்னுல் ஆப்தீன் தெரிவித்தார்.
கண்டியிலுள்ள தனது காரியாலயத்தில் நடத்திய ஊடக சந்தப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-  கண்டி மாவட்ட ஐ.தே.க.யின் மாகாண சபை அங்கத்தவர் இரு முறை தான் தெரிவு செய்யப்ட்டதாகவும் தனது அரசியல் பிரவேசம் தற்செயலானது என்றார்.
கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் லக்ஷ்மன் கிரியெல்லவே தனது அரசியல் குரு என்றும் அவரே தனக்கு இச்சந்தர்ப்பத்தை வழங்கியதாகத் தெரிவித்தார். காலாகாலமாக ஐ.தே.க. செல்வந்தர்களின் கட்சி என்றே நம்பப் பட்டு வந்தது. இதனால் சாதாரண குடிமக்களின் வாக்குகள் போதி அளவு கிடைக்காத நிலையை அவதானித்த லக்ஷ்மன் கிரியல்ல அவர்கள் கண்டி நகரில் சேரிப் புறங்களிலும் சாதாரண தொழலாளிகளாகவும் நலிவுற்ற மக்களாகவும் வாழ்கின்றவர்களது வாக்ககளை கவரும் நோக்கில் ஒரு வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டார். அந்த அடிப்படையில் சாதாரண பெட்டிக்கடைக் காரனாக இருந்து வாழ்வில் முன்னேறிய என்னை தேர்தலில் நிறுத்த  பொருத்தம் என அவர் கருதி எனக்கு அச்சந்தர்பத்தை வழங்கினார்.
அவரது மேற்படி வியூகம் சரியாக அமைந்தது. முதல் முறையாக நான் தேர்தலில் போட்டி இட்டு சுமார் 27 000 வாக்குகளைப் பெற்றேன். இது யாரும் எதிர் பார்க்காத ஒரு வெற்றி. ஆனெனில் என்னுடன் போட்யிட்டவர்கள் பெரும் புள்ளிகளாகும். இன்றைய அமைச்சரான எஸ்.பீ.திசாநாயக்கா மற்றும் இன்றைய பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் அவர்களின் வாரிசான எம்.ஆர்.எம். அம்ஜட் ஆகியோர்கள் தவிர மற்றவர்கள் என்னை விடக் குறைந்த வாக்குகளையே பெற்றனர்.
இரண்டாவது தடவை நான் போட்டியிட்ட போது 45972 விருப்பு வாக்குகளைப் பெற்று ஆசாத் சாலி மட்டுமே என்னை விட அதிக வாக்குகள் பெற்றார். ஆனால் அவர் ஐ.தே.க.யின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவரது கட்சி வேறு. எனவே ஐ.தே.க. என்ற வகையில் எனக்கே முதலிடம்கிடைத்தது எனலாம்.
இவ்வாறு என்னை உயர்த்திவைக்க காரணம் நான் வாழும் சூழலாகும். எனது சூழலில் சாதாரண மக்களே அதிகம் வாழ்கின்றனர். அவர்களிடையே இனமத குல பேதம் இல்லை. அவர்கள் எனக்கு தமது வர்குகளை வாரி வழங்கியதுடன் கண்டி மாவட்டத்தில் பரவலாக உள்ள சாதாரண ஏழை மக்கள் எனக்கு பூரண ஆதரவு நல்கினர். இதன் காரணமாக என்னைப் பொதுவாக ‘துப்பதாகே இதவதா’ என்பர். அதாவது ஏழைகளின் தோழன் என்றே அழைப்பர். நானும் எப்போதும் ஏழை பணக்காரன் என வேறு பாடு காட்டுவதில்லை.
என்னைப் படைத்த இறைவன் எனக்கு பல்வேறு அருட்கொடைகளைச் செய்துள்ளான். அவற்றில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு வழங்கு வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மாதாமாதம் எனக்கு ஒரு தொகை வேதனம் கிடைக்கிறது. அதனை விட எனது செயலாளர்களுக் கென்றும் எரிபொருளுக் கென்றும்  ஒரு அலவன்ஸ் கிடைக்கிறது. இவற்றை நான் எனது மனைவி பெயரிலோ அல்லது உறவினர் பேரிலோ பெற்றுக் கொள்வதில்லை. இவற்றை எல்லாம் வரிய மாணவர்களது கல்விக்காக வழங்கி வருகிறேன்.
கோடிக்கணக்கில் பணச் செலவு செய்து  மாகாண சபைக்குச் செல்பவர்கள் தேர்தலுக்கு செலவழித்த பணத்தைவிடவும் குறைந்தளவு பணத்திலேதான் பொதுச் சேவை செய்கின்றனர். இது மிகவும் வருந்தத் தக்க விடயம். அதாவது மாகாண சபைத் தேர்தலுக்காகச் சிலர் செலவிடும் பணத்தைக் கொண்டு பொதுச் சேவை மேற்கொண்டால் அது ஐந்து வருடங்கள் மாகாண சபையால் சய்யும் பணியை விட கூடியதாக இருக்கலாம். அந்த அடிப்படையில் மாகாண சபைகளுக்கு செலவிடும் பணத்தை விடக் குறைந்தளவு பயனே கிடைக்கிறது எனலாம். சாதாரண பெட்டிக்கடைக்காரணாக இருந்து சாதாரண குடிமக்களின் வாக்குகளைப் பெற்று இன்று கண்டி மாவட்டத்தில் மூவின மக்களினதும் பிரதி நிதியாககத் திகழும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளது.   அடுத்தபாராளுமன்றத் தேர்தலிலும் இதே மக்கள் என்னை ஆதரித்து பாராளுமன்றம் அனுப்புவர் என்பது எனது திடமான நம்பிக்கை. பல்கலைக்கழகம் முதல் உயர்கல்வி பறும் மாணவர்கள் உற்படப் பலருக்கு அதாவது 5000 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு நான் புலமைப் பரிசில்களும் நிதி உதவிகளும் செய்து வருகிறேன்.
மாகாண சபையால் எனக்கு வருடம் 25 இலட்ச ரூபா நிதியே ஒதுக்கப் படுகிறது. கண்டி மாவட்டத்தில் 13 தொகுதிகளுக்கும் நிதி ஒதுக்க வேண்டிஉள்ளது. சராசரி ஒரு தொகுதிக்கு இரண்டு இலடசம் ஒதுக்கவே அத் தொகை போதுமானது. இரண்டு இலட்ச ரூபாவால் என்ன அபிவிருத்தி செய்ய முடியும். எனவே எனது தனிப்பட்ட நிதியையே நான் பொதுச் சேவைகளுக்கு அதிகம் வழங்கி வருகிறேன். இதனால் பொது மக்ள் எப்போதும் என்னுடனே இருக்கின்றனர். அத்துடன் நான் வாழும் சுதும்பொலப் பிரதேசம் 100 சதவீதம் சாதாரண குடிமக்கள் செறிந்து வாழும் பிரதேசம். ஆவ்களும் என்றும் என்னுடன் இருப்தை அறிய முடிகிறது.
மாகாண சபைகளில் முதலீடு செய்யும் அளவு வெளியீடுகள் (அவுட் புட்) இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆயிரக் கணக்கான மில்லியன்களை மொத்தமாகவும் சில்லரையாகவும் மாகாண சபைகளுக்கு வழங்கி கடைசியில் குறைபாடுகளையெ காணமுடிகிறது. அதிகமான இடங்களில் பாதைகளுக்கான பெரிய விளம்பரப் பலகைகளை மட்டுமே காண முடிகிறது.
சுகாதாரத் துறையை எடுத்துக் கொண்டால் இன்று நாட்டில் மிக நெருக்கடிக்குள்ளாகி உள்ள ஒரு துறையாகக் காணமுடியும். போதிளவு மருந்தகள் இல்லை. தகுதியானவர்கள் நியமனம் செய்யப் படுவதில்லை. மாகாண சபை அமைச்சரை மட்டும் எஉதிர்hபாhத்து அவற்றை தீர்க்க முடியாதுள்ளது. வேறு வகையிலான திட்டங்கள் தேவை.
இன்று கல்வித்துறையில் 80 சதவீதம் வீழ்ச்சியே காணப் படுகிறது.மத்திய மாகாணத்தைப் பொருத்த வரை முதலமைச்சர் மட்டுமல்ல பலர் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்களாக உள்ளனர். முஸ்லீம்களது முயற்சிக்குறிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. எதிர்கட்சியாக இருந்து கொண்டு எம்மால மேற்கொள்ளப் படும் உதவிகள் கூட ஆளும் தரப்பால் மேற்கொள்ளாமை வருந்தத் தக்கது. மத்திய மாகாண விளையாட்டுத் துறையை எடுத்தாலும் அதுவும் வீழ்ச்சியடைந்து விட்டது. காரணம் பயிற்சி பெறவோ போட்டிகள் நடத்வோ மைதானங்கள் இல்லை. போகம்பறை மைதானத்தை முன்பு குறைந்த செலவில் அல்லது இலவசமாக மாநகர சபை வழங்கி வந்தது. தற்போது பயிற்சி பெற்க் கூட ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாவிற்கு மேல் அதிகார சபைக்கு செலவழித்து மைதானத்தை ஒதுக்க வேண்டி உள்ளது. 400 இலட்சம் செலவழித்து புனரமைக்கப்பட்ட மைதானம் இன்னும் பூர்த்தியாகவில்லை. அதில் பல்வேறு நிதி மோசடிகள் நடந்துள்ளன. சியான முகாமை இல்லை.
மாகாண சபை நியமனங்கள் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப் படுகிறது. அது பற்றி மாகாண சபையில் பேசினால் சரியான பதில் கிடைப்பதில்லை. தகுதியானவர்களுக்கு தகுதியான பதவிகள் வழங்கப் படவேண்டும். இறுதியாக நடந்த மேல்மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க. ன் முன்னேற்றம் தெளிவாக உள்ளது. எனவே எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் ஐ.தே.க. வெற்றி பெறும். நாட்பை; பாதுகாக்கிறோம், யுத்த்தில் வெற்றி பெற்று விட்டோம் என்று கூறிக் கொண்டும் போலி அபிவிருத்திகளைச் செய்து கொண்டும் தொடர்ந்து வெற்றி பெற முடியாது. சிறிய சலுகைகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஆளும் தரப்புடன் இணைந்தவர்கள் தான் ஐ.தே.க.யில் ஒற்றுமை இல்லை. ரனில் விக்கரம சிங்க தகுதியில்லாத தலைவர் என்றெல்லாம் பிரசாரம் செய்கின்றனர். ரனில் விக்ரமசிங்க புத்தசாலியான தூரநோக்குடன் சிந்திக்கும் ஒருவர்.

கடந்த மத்திய மாகாண சபையில் ஆஸாத் சாலியின் பிரவேசம் ஐ.தே.க.யைப் பாதித்தது. அவர் இனவாதம் பேசியதால் சிங்கள மக்கள் வாக்களிக்க வில்லை. இதனால் கண்டி மாவட்டத்தில் 12 ஆக் இருந்த எமது எண்ணிக்கை 9 ஆக வீழ்ந்தது. அது மட்டுமல்ல முஸ்லீம்களது அங்கத்தவர் தொகையும்  குறைந்து விட்டது. அனேகமாணவர்கள் ஒரே அபேட்;சகருக்கு வாக்களித்மையாகும். தனி நபருக்கு ஐம்பதாயிரம் முதல் அறுபதாயிரம் வரை வாக்களிக்காமல் அதனை பங்கிட்டு அளித்து இன்னும் சிலரைத் தெரிவு செய்திருக்க முடியும் எனவே ஏழை மக்களின் தோழனாக இருந்து என்றும் சேவையாற்றுவேன் என்பதை மீண்டும் கூற விரும்புகிறேன் என்றார்

Related Post