Breaking
Fri. Jan 10th, 2025

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் டேவிட் கெமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக இடங்களை பிடித்து தொடர்ந்து 2 ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

650 இடங்களைக்கொண்ட இங்கிலாந்தின் பாராளுமன்றத் தேர்தல் நேற்று (07) நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மொத்தமுள்ள 650 தொகுதிகளில், இதுவரை 540 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 245 இடங்களும், மிலிபாண்ட் தலைமையில் போட்டியிட்ட தொழிலாளர் கட்சிக்கு 212 இடங்களும், நிகோலா ஸ்டர்ஜியன் தலைமையிலான ஸ்கொட்டிஷ் தேசிய கட்சிக்கு 55 இடங்களும், பீட்டர் ரொபின்சன் தலைமையிலான டெமாக்ரட்டிக் யூனியனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்களும், நிக் க்ளெக் தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு 6 இடங்களும் கிடைத்துள்ளன.

வெற்றி முகத்தில் இருப்பது தெரிந்தவுடன் செய்தியாளர்களுடன் பேசிய கெமரூன், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு இன்றைய நாள், மிக பலத்த நள்ளிரவாக அமைந்தது என்றார்.
அதேபோல், தோல்வியை ஒப்புக்கொண்ட எடி மிலிபாண்ட், தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாகவும், வருத்தத்தைத் தருவதாகவும் தெரிவித்தார்.

Related Post