Breaking
Wed. Jan 8th, 2025
இங்கிலாந்தில் நேற்றுமுன்தினம் (07-05-2015) நடந்த நாடாளுமன்ற தேர்தலில், 13 முஸ்லிம்கள் எம்பி’க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர், நடப்பு நாடாளுமன்றத்தில் 8 முஸ்லிம்கள் உள்ள நிலையில், இது அபாரமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
நடப்பு நாடாளுமன்றத்தில், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த 10 பேர் எம்.பி.க்களாக உள்ள நிலையில், அதே எண்ணிக்கையை இந்திய வம்சாவளியினர் மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, லிபரல் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்டிருந்த 24 முஸ்லிம்களில் 13 முஸ்லிம்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
59 இடங்களில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினரில், 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற முஸ்லிம் எம்பிக்களின் பெயர்கள் வருமாறு,
1-Tasmina Ahmed Sheikh (SNP, Ochil and South Perthshire)
2-Rupa Huq (Labour, Ealing Central and Acton)
3-Tulip Rizwana Siddiq (Labour, Hampstead and Kilburn)
4-Nusrat Ghani (Conservatives, Wealden)
5-Naz Shah (Labour, Bradford West)
6-Imran Hussein (Labour, Bradford East)
7-Khalid Mahmood [Labour]
8-Shabana Mahmood [Labour]
9-Rushanara Ali [Labour]
10-Yasmin Qureshi [Labour]
11-Sadiq Khan [Labour]
12-Sajid Javid [Conservative]
13-Rehman Chisti [Conservative]
வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர் :
1-கெய்த் வாஸ் -‘லீசெஸ்டர் ஈஸ்ட்’
2-வீரேந்திர சர்மா -ஈலிங்சவுத்ஹால்
3- வலேரி வாஸ், -வால்சால் சவுத்
4-சீமா மல்கோத்ரா -லண்டன் ஈஸ்ட்
5-பிரீத்தி படேல், விதாம்
6-ரிஷி சுனாக், (இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன்) -ரிச்மாண்ட்
7-லிசா நாண்டி,
8-சாஜித் ஜாவித், (முஸ்லிம்)
9-அலோக் சர்மா,
10-சைலேஷ் வாரா

Related Post