அஸ்ரப் ஏ சமத்
-இசிப்பத்தான கல்லூரியின் உயர்தரம் கல்விகற்கும் முஸ்லிம் மாணவனுக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பழையமாணவர் ஒருவர் அறைந்து காது வெடித்துள்ளது –
குஸ்னி ஹக் – கல்கிசை இவர் கொழும்பு 5 இசிப்பத்தான கல்லூரியில் தரம் 1 இல் இருந்து தமிழ் மொழி முலம் கல்வி கற்று தற்பொழுது க.பொ.த. உயர்தரத்தில்; வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வருகின்றார்.
இம்; மாணவனுக்கு இக் கல்லூரியில் சிங்கள மொழி முலம் கல்வி பயின்ற பழைய மாணவர் ஒருவர் அறைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவாதாவது
அங்கு அதிபரின் அனுமதியுடன் கைப்பந்தாட்ட கோச்சாகவும் எடுபிடி வேலைகள் செய்வதற்கும் அன்சலோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பாடசாலை நேரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 11.30 மணியளவில் கல்லூரியில் சிரமதானம் செய்து கொண்டிருந்தனர். அந்நேரம் குஸ்னியும் சக நண்பர்ளும் தண்னீர் போத்தலை எடுத்துக்கொண்டு ; விளையாடிக் கொண்டிருந்திருந்துள்ளனர்.
இவ் வேளையில் ஆரம்பப்;பிரிவு மாணவன் ஒருவன் எனது தண்னீர்போத்தலை உயர்தர மாணவர்கள் எடுத்துக் கொண்டு தருகின்றார்கள் இல்லை என இந்த பழையமாணவனிடம் முறையிட்டுள்ளார்.
அவர்களை அழைத்துவரும்படிச் சொல்லியிருக்கின்றார் பழைய மாணவர்.
அவர்கள் சென்றதும் முதலில் குஸ்னியை எடுத்த எடுப்பிலே எவ்வித விசாரணையுமின்றி காதில் பலமாக அறைந்துள்ளார்.
அவருடன் இருந்த ஏனைய மாணவன் தனக்கும் அடிப்பார் திடிரேன பாய்ந்து தப்பியுள்னர். தாக்கப்பட்பட்ட மாணவனது வலது காதின் ஒரு பக்கம் உட்பாறை வெடித்துள்ளது.
உடன் மயக்கமுற்று உடன் நிலத்தில் விழுந்து கதறியுள்ளார். உடனே அதிபர் பெரேராவுக்கு சக மாணவர்கள் அறிவித்துள்ளார்கள்.
. சக இரு ஆசிரியர்கள் உடன் அழைத்துக்கொண்டு களுபோவில வைத்தியாலைக்குச் கொண்டு சென்றுள்னர். தற்பொழுது வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையில் காது உற்பாறை பலமாக தாக்கப்பட்டுள்ளதால் இவரின் ஒரு காது கேட்பது குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வைத்திய அறிக்கையின் பின்னரே காதினை ஒப்ரேட் பண்னி பார்க்கமுடியும். எனச் சொல்லுகின்றனர்.
இவ்விடயத்தினை மாணவனின் பெற்றோரிடம் உடன் ஊடகங்களுக்கோ, அல்லது பொலிசில் முறையிட வேண்டாம் என பெற்றோரை கேட்டுள்ளனர்.
இவ் விடயம் சம்பந்தமாக ஏற்கனவே நாரேகேன்பிட்டிய பொலிசில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறையிடப்பட்டுள்ளது. மாணவன் கடந்த ஒரு வாரமாக பாடசாலைக்கோ மற்றும் தனது ரியூசன் வகுப்புகளுக்கும் செல்லாமல் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார்.
தனது காதில் சில் என்று அலறும் இரைச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதாக தெரிவிக்கின்றார்.
இசிப்பத்தான கல்லூரியின் உதவி அதிபர் எம்.நஜீமுத்தீன் வர்த்தகப்பிரிவு ஆசிரியர் வகாப் ஆகியோர் மாணவனின் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மாணவன் குஸ்னி அவரது பாதிக்கப்பட்ட காதுடன் நான் எடுத்த புகைப்படத்தை பிரசுரிக்க வேண்டாம் என்று வினயமாகக் கேட்டுதற்கினங்கவே நான் அதனை அனுப்பவில்லை)
தாக்குதலுக்குள்ளான மாணவன் ஊடகவியலாளர் அஸ்ரப் .ஏ. சமதின் – சகோதரியின் மகன் – (மருமகன்) ஆவார்.
(கல்வியமைச்சரிடம் ஊடக மாநாட்டின்போது இவ்விடயம் சம்பந்தமாக கேள்வியெழுப்புவேன் என ஊடகவியலாளர் அஸ்ரப் .ஏ. சமத் குறிபிபட்டுள்ளார்.)