சிரியாவின் போராளிக் குழுக்களுடன் இணைந்து கொள்ளும் நோக்கில் வந்த மூன்று மாலைதீவுப் பிரஜைகள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 மற்றும் 25 வயதான இரண்டு ஆண்களும் 18 வயதான பெண்ணுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு மாலைதீவுக்கே நாடு கடத்தப்பட்டுள்ளதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மூவரும் துருக்கியின் ஊடாக சிரியாவுக்குள் பிரவேசிக்க திட்டமிட்டதோடு மருத்துவ வியடம் தொடர்பில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் அவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது ஒருவழி விமான அனுமதிச் சீட்டுக்களையே கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவரில் 23 வயதான ஆணும் 18 வயதான பெண்ணும் சட்டபூர்வமற்ற முறையில் திருமணம் செய்து கொண்டவர்கள் எனவும் குறித்த பெண் தற்போது 7 மாதக் கர்ப்பிணியாக உள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. (o)