Breaking
Tue. Dec 24th, 2024

– பழுலுல்லாஹ் பர்ஹான் –

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பரீட் நகர் மஸ்ஜிதுல் மனாருல் ஹ{தா பள்ளிவாயல் மஹல்லாவை சேர்ந்த என்.எம்.மர்சூக் என்பவருடைய மகள் பாத்திமா இல்மா (வயது 10) என்ற சிறுமிக்கு மூலையில் கட்டி ஒன்று ஏற்பட்டுள்ளதால் (Brain Lesion of Uncercain Patholog) என்ற ஆபத்தான நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்.
இச்சிறுமிக்கு வைத்திய சத்திரசிகிட்சை செய்வதற்கு ரூபா.600,000 தேவை என இச்சிறுமியினை பரிசோதனை செய்த சத்திர சிகிச்சை நிபுனர் டாக்டர். சமன் புஸ்பகுமார (MBBS)COL.MRCS.(ENG)என்பவர் தெரிவித்துள்ளதால் இச்சிறுமிக்கு அவசரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு எவ்வித உதவியும் அற்ற இக்குடும்பம் மற்றும் இச்சிறுமியின் தந்தை அன்றாடம் கூலி தொழில் செய்து வருபவர்.
மிக கஷ்ட்டத்தோடு வாழும் இக்குடும்பத்தினர் பாரிய இத்தொகையினை ஈடு செய்வதற்கு முடியாமல் தங்களது மேலான உதவியினை எதிர்பார்க்கிறார்கள்.
எனவே இக்குடும்பத்தின் நிலமையை கருத்திற்கொண்டு தங்களால் முடியுமான உதவியினை சகல சகோதர, சகோதரிகள், தனவந்தர்கள் எல்லோரும் வழங்குமாறும் இவர்களுக்கு வழங்க கூடிய உதவியை இச்சிறுமியின் தாயின் வங்கி கணக்கு இலக்கமான MS.MUBEENA -SEYLAN BANK
KATTANKUDY BRANCH -ACCOUNT NO:074032335986
BOC BANK:77676263 என்ற இலக்கத்திற்கு அனுப்புமாறும் மேலதிக தொடர்புகளுக்கு காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தொலைபேசி இலக்கமான 0772221233 தொடர்பு கொள்ளுமாறும் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் கேட்டுக் கொள்கின்றது.

a1 a2 a3 a4 a5 help1111

Related Post