நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சரின் மகனுமான சதுர சேனாநாயக்கவிற்கும் ராகம பொலிஸ் நிலையத்திற்கும் இடையிலான வழக்கு இணக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடமையில் ஈடுபட்டிருந்த ராகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை திட்டி அச்சுறுத்தியதாக சதுர மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இது தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு தரப்பினரும் சுமுகமாக தீர்த்துக்கொள்ள இணங்கியிருந்தனர்.
இரு தரப்பினரதும் ஒப்புதலின் அடிப்படையில் வழக்கினை முடிவுக்குக் கொண்டு வருவதாக நீர்கொழும்பு பிரதான நீதவான் ருசிர வெலிவத்த தெரிவித்துள்ளார்.
ராகம வாகன தரிப்பிடத்தின் உரிமை ஏற்பட்ட பிரச்சினை ஒன்றின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சதுர பொலிஸார் திட்டி அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
ராகம பொலிஸார் இது தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
நாடாளுமன்றம் போன்ற உன்னத நிறுவனமொன்றின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இதனை விடவும் பொறுப்புடனும் முன்மாதிரியாகவும் நடந்து கொள்ள வேண்டுமென நீதவான், சதுர சேனாரட்னவிற்கு நீதிமன்றில் பகிரங்கமாக அறிவுரை வழங்கியுள்ளார்.
வழக்கினை இணக்கப்பாட்டின் அடிப்படையில் முடித்துக் கொள்ள விரும்புவதாக பொலிஸார் தரப்பில் முன்னிலையாகியிருந்த உப பொலிஸ் பரிசோதகர் கெலும் பண்டார நீதிமன்றில் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.