இணையதளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ள அநாவசிய விடயங்கள் மற்றும் பொய்யான விடயங்களை கருத்திற்கொண்டு பணியாற்ற இந்த அரசாங்கம் தயாராக இல்லை என நீர்பாச மற்றும் நீ முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா தெரிவித்தார்
19 திருத்தச்சட்டம் தொடர்பில் இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (25) பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை பாராளுமன்றத்தில் முன்வைக்காத சட்டம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் எவ்வாறு கேள்வியெழுப்பலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எ.எச்.எம். அஸ்வர் பதில்வினா தொடுத்தார்.
மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான மனூஷ நாணயக்கார- இணையதளங்களில் தமக்கு வேண்டுமாப்போல் செய்திகளை பிரசுரித்துவிட்டு அவை தொடர்பில் பாராளுமன்றில் கேள்வியெழுப்புவதாகவும் எதிர்கட்சித் தலைவர் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கேள்வியெழுப்புவது வருத்தத்திற்குரிய விடயம் என்றும் தெரிவித்தார்.