இணையத்தளம் மற்றும் கைத்தொலைபேசிகளின் ஊடாக தவறான பயன்பாடு மூலமோ அல்லது பாலியல் தொல்லைகளோ வேறு முறையில் பாலியல் சேட்டைகளோ மேற்கொள்ளப்படின் தகுந்த நடவடிக்கை எடுக்கும் முகமாக முறைப்பாடினை பதிவு செய்ய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0773220032 எனும் கைத்தொலைபேசி இலக்கத்தினூடாக குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
இன்னும் குறித்த சேவையானது 24 மணித்தியாலங்களும் இயங்கிக் கொண்டிருக்கும் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், தமக்கு கிடைக்கப்பெறும் அசௌகரிய குறுந்தகவல்கள் (SMS) இனூடாக தெரியப்படுத்துவதோடு, வாட்ஸ்அப் (What’s App), வைபர் (Viber) மற்றும் இமோ(Imo) ஊடாகவும் முறைப்பாடுகளை மேற்கொள்ளமுடியும்.
அவ்வாறே,
Facebook – NCPA Compbining
Twitter – NCPA cyber Unit
Instagram – NCPA cyber unit
Snop Chat – NCPA Cyber Unit இனூடாகவும் முறைப்பாடுகளை பதியலாம்.