Breaking
Tue. Mar 18th, 2025
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில், இணையத்தின் ஊடாக முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் செயல்திட்டமொன்று நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக பொதுமக்களுக்கு போதிய தெளிவின்மையால் இது தொடர்பாக முறைப்பாடுகளை தெரிவிக்க மக்கள் பின்னிற்பதாகவும் தெரிவித்துள்ள ஆணைக்குழு இதனால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இணையத்தின் ஊடாக முறைப்பாட்டினை தெரிவிக்கும் செயல்திட்டமானது நடைமுறைப்படுத்தும் வரை பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 1954 என்ற இலக்கத்தின் ஊடாக தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

By

Related Post