இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்னும் 50,000 மாணவர்கள் தேசிய அடையாள அட்டை பெற வேண்டியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மூவாயிரம் விண்ணப்பதாரிகளின் விண்ணப்பத்தில் பிழைகள் இருப்பதால் அவற்றை திருப்பி அனுப்பியுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.
மேலும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத பாடசாலைகளும் இருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.