கொஸ்கம – சலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் அப் பகுதியில் இருந்து 800 மெற்றிக் தொன் கழிவுகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், எட்டு நாட்களுக்குள் இந்தக் கழிவுகளை அகற்றிவிட முடியும் எனவும் குறித்த அமைச்சு கூறியுள்ளது.
சலாவ இராணுவ முகாமுல் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவத்தின் பின்னர், அப் பகுதியில் தேங்கிய குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன் நிமித்தம் மேல் மாகாண நிர்வாக திணைக்களம் 22 இலட்சத்துக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியது.
மேலும் இந்த வேலைத் திட்டம் சீதாவக பிரதேச சபையின் தலைமையில் இடம்பெற்றதோடு, இதற்காக ஹோமாகம மற்றும் தொம்பே ஆகிய பிரதேசசபைகளின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.